About Yogisthalam

Who is Yogi Ramsuratkumar and what is he? Is he a saint, a sage, a spiritual master, a guru or God Himself?

Which religion does he belong to? | What is his teaching?
How does he help people? Religious people, seekers, intellectuals, believers, non-believers and even common people, whoever comes across Yogi Ramsuratkumar ask these questions. The people, who had close association with Yogi attempt to answer these questions in various ways. The author also likes to share his perception with the readers.

Shri S. Parthasarathy
Tiruvannamalai.

சுவாமி யோகி ராம்சுரத்குமாருடன் எனது வாழ்க்கைப் பயணம் இதுநாள்வரை சுமார் 45 ஆண்டுகள் இதமாக, மானுட சுக துக்கங்களுடனும், மானுட வாழ்வு கடந்த ஒருவித அமானுஷ்ய ஆன்ம அனுபூதியுடனும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

சுவாமியோடு கழிந்த 25 ஆண்டுகளில் நான் கண்டு ரசித்து, பிரமித்து, கண்ணீர் மல்கி, உணர்வுகள் பிரவாகமாக வெளிப்பட்ட சில சம்பவங்களை இங்கே கோர்த்துள்ளேன். இவைகள் யாவும் முகநூல் வாயிலாகவும், எனது முந்தைய நூல் “யோகியுடன் கொஞ்ச தூரம்” வாயிலாகவும் ஏற்கனவே வெளிவந்துள்ளது. அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து Gospel of Yogi Ramsuratkumar என்ற பெயரில் வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன்.